சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா கடந்த செப்டம்பர் 11ம் தேதி தங்களுடைய 20வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். ஆனால், இந்த முறை வித்தியாசமாக திருமண நாளை கொண்டாட நினைத்த இருவரும் கிறிஸ்தவ முறைப்படி ராயல் சர்ச்சில் திருமணம் செய்துக் கொண்ட வீடியோவை சற்றுமுன் சூர்யா - ஜோதிகா தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.
நடிகர் சூர்யா தனது மகன் தேவ் உடனும், நடிகை ஜோதிகா தனது மகள் தியாவுடன் மணமகன் - மணமகள் போல கோட் சூட் மற்றும் பிரைடல் கவுன் அணிந்துக் கொண்டு ஒயிட் அண்ட் ஒயிட்டில் வந்து திருமணம் செய்துக் கொண்டது போன்ற வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
மேலும், நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த வீடியோவை வெளியிட்டு, "நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யா உடனான தனது 20 ஆண்டுகால காதல் மற்றும் செல்லச் சண்டைகள் நிறைந்த வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில், தங்களின் திருமண உறுதிமொழிகளைப் புதுப்பித்து (Vow Renewal) சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதற்கு 'தி சீக்குவல்' (The Sequel) என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "இது ஒரு மிகச்சரியான திருமண வாழ்க்கைக்கான கொண்டாட்டம் அல்ல. மாறாக, நம்மிடையே உள்ள குறைகள், பரஸ்பர சரிக்கட்டல்கள், புரிதல்கள், தியாகங்கள் மற்றும் ஒருவருக்கொருவர் காட்டும் சுயநலமற்ற அன்பிற்கான கொண்டாட்டம். நமக்காக நாம் உருமாறிய மனிதர்களின் கொண்டாட்டம் இது. எட்டாத கனவாகத் தெரிந்த ஒன்று, இன்று என் வாழ்நாள் முழுவதும் நான் காணும் நிஜமாக மாறியுள்ளது" என்று ஜோதிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஜோதிகா பகிர்ந்துள்ள புதிய உறுதிமொழிகள்:
மகிழ்ச்சியான மனிதராக வாழ்தல்: வாழ்க்கையின் நேர்மறையான பக்கங்களை மட்டுமே பார்க்க விரும்புவதால், எப்போதும் ஒரு மகிழ்ச்சியான மனிதராக வாழ உறுதியேற்கிறேன். வாழ்க்கையைக் கொண்டாடுதல்: தன்னை விட அதிகமாகத் தன்னை மதிக்கும் ஒரு நபர் கணவராக இருக்கும்போது, இந்த வாழ்க்கையே ஒரு சிறந்த பரிசுதான்.
அதனால் இந்த வாழ்க்கையைக் கொண்டாட உறுதியேற்கிறேன்.
குறை கூறாமல் இருத்தல்: வாழ்வில் என்றும் குறைகூற மாட்டேன். மிகப்பரந்த வானத்திற்கே பூமியைத் தொடும் பாக்கியம் இல்லாதபோது, நான் ஏன் குறை கூற வேண்டும்?
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஏதோ ஒரு வகையில் முழுமையற்றவைதான். அந்த இடைவெளிகளை நாம் எவ்வாறு நிரப்புகிறோம் என்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது.
நன்றி உணர்வுடன் இருத்தல்: ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தன்னைப் பாதுகாக்கும் கணவரின் அரவணைப்பில் விழிப்பதற்கும், தன் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் வாழும் நோக்கத்தையும் தந்த அழகான குழந்தைகளுக்காகவும் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன். ஆரோக்கியத்தைப் பேணுதல்: நாம் சேர்க்கும் உண்மையான சொத்து ஆரோக்கியம் மட்டுமே.
ஆடம்பரமான மாளிகைகளில் கூட கசிவுகளும் கரையான்களும் ஏற்பட்டு பழுதுபார்க்க வேண்டியிருக்கும். அதனால் ஆரோக்கியமாக வாழ உறுதியேற்கிறேன்.
சிறந்த தாயாக இருத்தல்: சமைப்பது, சுத்தம் செய்வது அல்லது உதவி செய்வது ஆகியவற்றால் மட்டுமல்ல; எப்போதும் புன்னகையோடு இருப்பதன் மூலம் தன் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த தாயாக இருக்க உறுதியேற்கிறேன்.
அந்தப் புன்னகை, அவர்களின் அப்பா அம்மாவின் காதல் கதையை அவர்கள் மீண்டும் வாழ விரும்பும் வகையில் இருக்க வேண்டும். Suriya and Jyotika done a Royal Church Wedding at their 20th Anniversary and takes some Vows சூர்யாவிற்கான ஜோதிகாவின் காதல் உறைந்த வரிகள் "என் சூர்யா, உன்னோடு சண்டையிட்டு, பின்னர் சமாதானமாகி, அதன் மூலம் ஒவ்வொரு முறையும் உனக்கு இன்னும் நெருக்கமாகும் ஒரு குறைகளுள்ள மனைவியாகவே நான் எப்போதும் இருக்க உறுதியேற்கிறேன்" என்று ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நம்முடைய நட்பை எல்லாவற்றையும் விட மேலாகப் போற்ற உறுதியேற்கிறேன். ஏனெனில், உனக்கு நிகரான ஒருவரை, உனது நம்பிக்கைக்குரியவரை, அரட்டை அடிக்கும் பார்ட்னரை, உனது சிறந்த நண்பனை என அனைவரையும் கணவராகவும் உன் குழந்தைகளின் தந்தையாகவும் இருக்கும் இந்த ஒரே சிறப்புமிக்க மனிதருக்குள் கண்டறிவது என்பது எளிதானதல்ல" என்று சூர்யா உடனான நட்பு குறித்து ஜோதிகா நெகிழ்ந்துள்ளார்.
"சிறந்த புரிதலுடன் கூடிய நமது அடுத்த இருபது ஆண்டுகால பயணத்திற்கான வாழ்த்துகள்" என்று தங்களின் இருபது ஆண்டுகால பந்தத்தை ஜோதிகா அழகாக நிறைவு செய்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!